நாட்டியம் என்றால் வயதில் பாதியைக் குறைத்துவிட்டு பரதநாட்டிய உடையுடன் மேடையேறி விடுவார் ஹேமமாலினி. திருப்பதியில் தனது மகள்களுடன் பரதநாட்டியம் ஆடியவர் அண்மையில் டெல்லியில் நடந்த பரதநாட்டிய விழாவில் கலந்து கொண்டார்.
பரதம் என்றால், இரண்டு டீன் ஏஜ் பெண்கள் இருக்கும் இந்த அழகான அம்மா ஏன் பரபரக்கிறார் என்பதற்கு அன்று விடை கிடைத்தது.
நடனம் பூஜைக்குச் சமமானது. உற்சாகம், புத்துணர்ச்சி தருவது. அத்துடன் தெய்வீக அருளையும் வாரி வழங்குகிறது என பரதநாட்டியத்தின் பெருமையை கொஞ்சம் விரிவாகவே விளக்கிச் சென்றார்.
கடவுள் குறித்து இவர் சொன்னது ஹைலைட். தெய்வீக அருள் கிடைக்காதவர்களே கடவுள் இல்லையென்று கூறுவார்கள். யாராவது என்னிடம் கடவுள் இல்லை என்றால் சிரிப்பு வந்துவிடும் என்றார்.
இந்த பாரதிய ஜனதா எம்.பி. மேடையில் அடிக்கடி சிரிக்கும் ரகசியம் இதுதானா?