சொந்த வீட்டில் இடி விழுந்தாலும், அடுத்த வீட்டுக்காரர் சொன்னால்தான் சிலருக்கு தெரிகிறது. தீபிகா படுகோனும், ரன்பிர் கபூரும் தீவிர காதலில் இருக்கிறார்கள் இந்தக் காதல் விஷயம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெரியும். ஆனால் தீபிகாவின் வீட்டில்?
அங்குதான் காமெடி. யாராவது தீபிகாவின் காதல் குறித்து கேட்டால் கத்திரி வெயில் தார் சாலையாக கொதிக்கிறார் தீபிகாவின் அப்பா பிரகாஷ் படுகோன்.
தீபிகா படுகோன் யாரையும் காதலிக்கவில்லை, குறிப்பாக ரன்பிர் கபூரை. வேண்டுமென்றே எழுதி பரப்பப்படும் நான்சென்ஸ் இந்த காதல் என பற்ற வைக்காமலே எரிகிறார்.
ரன்பிர் கபூரின் அம்மா நீது கபூரும் இதையே இன்னும் மென்மையாக சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை சினிமாவில் இதுபோன்ற கதைகள் கிளம்புவது சகஜம்.
இப்போது நம்முன் உள்ள கேள்வியெல்லாம், தீபிகாவும் ரன்பிரும் காதலிப்பது சம்பந்தப்பட்ட அவர்களுக்காவது தெரியுமா? தெரியாதா?
மீடியாக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!