காதலர் சைஃப் அலிகானுடன் நடித்த தர்ஷன் சரியாக போகவில்லை. ஆனாலும், பிரகாசம் குறையாத நிலவாக இருக்கிறார் கரீனா கபூர்.
கொஞ்சம் பின்னோக்கி யோசித்துப் பார்ப்போம். அன்று கரீனாவுக்கு ராணி முகர்ஜி, அமிஷா பட்டேல் என எத்தனை போட்டிகள்! இன்று? க்ளீன் ஸ்லேட். கரீனாவின் ஒன் விமன் ஷோதான் பாலிவுட்டில்.
கரீனாவின் பிரகாசத்திற்கு இதுவெல்லாம் காரணமில்லை. விரைவில் அமீர் கானுடன் நடிக்கிறார். மணிரத்னத்தின் லஜ்ஜோவில் இருவரும் நடிப்பதாக இருந்தது. பிறகு அந்த திட்டமே கைவிடப்பட்டது.
இந்நிலையில் இடியட்ஸ் வடிவில் இன்னொரு வாய்ப்பு. ராஜ்குமார் கிரானியின் இடியட்ஸ் அமீர் கானுடன் நடிக்க கரீனாவுக்கு அழைப்பு வந்தது. உடனே ஒத்துக் கொண்டவர், படம் தொடங்கும் நாளுக்காக பரவசத்துடன் காத்திருக்கிறார்.