சல்லடை போட்டுச் சலித்தாலும் அஜய் தேவ்கானின் ஃபேமிலியை மும்பையில் கண்டுபிடிக்க முடியாது. குடும்பத்தோடு டூர் போயிருக்கறார் இந்தப் புதிய இயக்குநர்.
சினிமா, விளம்பரப் படங்கள் என்று அஜய் தேவ்கான்- கஜோல் தம்பதிக்கு இடைவிடாத பணிகள். அஜய் தேவ்கான் வேறு 'யு மி அர் ஹம்' என்ற படத்தை இயக்கி முதல் முறையாக டைரக்ஷன் துறையில் நுழைந்துள்ளார்.
கஜோல் நடித்த 'யு மி அர் ஹம்' பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், நட்சத்திரத் தம்பதியின் பர்ஸைப் பதம் பார்க்கவில்லை.
இடைவிடாத வேலைகளில் இருந்து தப்பிக்க குடும்பத்தோடு கோவா சென்றுள்ளார் அஜய் தேவ்கான். இந்த மாத இறுதியில்தான் மும்பை திரும்புகிறாராம்.
இந்த பிக்னிக்கின் சீஃப் கெஸ்ட், கஜோலின் தங்கை தனிஷா. அவரும் கோவாவில்தான் உள்ளார்.