கரம் மசாலா படக் கூட்டணி மீண்டும் ஒன்றிணைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஸ்டுடியோ 18 நிறுவனம் அனீஸ் பஸ்மி இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறது. இதில் அனேகமாக அக்ஷய் குமாரும், ஜான் ஆபிரஹாமும் நடிக்கலாம்.
ப்ரியதர்ஷனின் கரம் மசாலாவில் அக்ஷய்யும் ஜானும் இணைந்து நடித்தனர். படம் ஹிட்! இருவருக்குள்ளும் இதுவரை ஈகோ மோதல்கள் இல்லை என்பதால் கூட்டணிக்கான வாய்ப்பு அதிகம்.
இயக்குனர் அனீஸின் டைக்ஷனில் ஜான் ஆபிரஹாம் நடிப்பது இதுவே முதல்முறை. அக்ஷய் ஏற்கனவே இரு படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் படம் வெல்கம் சூப்பர் ஹிட். இரண்டாவது படம் சிங் ஈஸ் சிங் விரைவில் வெளியாக இருக்கிறது.