ஷாரூக்கானுடன் நடிக்க நான், நீ என நடிகைகளுக்குள் போட்டி. இதில் கேரக்டர் சரியில்லை என்று ஷாரூக்கானிற்கே டாடா காட்டியிருக்கிறார் ஒருவர்.
மலையாள கதபறயும் போன் படம் இந்தியில் பில்லு பார்பர் என்ற பெயரில் வெளியாகிறது. படத்தைத் தயாரிப்பதுடன் மம்முட்டி நடித்த வேடத்திலும் நடிக்கிறார் ஷாரூக்கான். இவருக்கு ஜோடியாக நடிக் அமிஷா பட்டீலைக் கேட்டனர்.
கதையைக் கேட்டவர் படத்தில் தனது கேரக்டர் சரியில்லை என்று நோ சொல்ல, அப்போது அவருக்குப் பதில் நடிப்பவர் லாரா தத்தா.
அமீஷா வேண்டாம் என்ற வேடத்தில் லாரா நடிக்கும் மர்மம் என்ன?
இதிலென்ன சஸ்பென்ஸ்... கரன்சியைக் காட்டினால் எந்த துக்கடா வேடத்திலும் நடிப்பார் தத்தா என்கிறது பாலிவுட் வட்டாரம்.