அஜய் தேவ்கானின் (இயக்குனராக) முதல் படம் 'யு மீ அவுர் ஹம்' ரிலீசுக்கு தயாராகி விட்டது.
படப்பிடிப்பில் இருக்கும்போதே, படத்தில் நடித்த தனது மனைவி கஜோலை கண்டபடி புகழ்ந்து வந்தார். படம் முடிந்துவிட்ட நிலையில் இந்தப் புகழ்ச்சி அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.
கஜோலைப் போல் வேறொரு நடிகை இல்லை எனும் அளவுக்கு, தேவ்கானின் புகழ்ச்சி அதன் எல்லையை மீறியிருக்கிறது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் சினிமா நட்சத்திரங்களை தங்கள் பக்கம் ஈர்க்க, செப்படி வித்தைகளை இருபெரும் தேசிய கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி. இதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
தாமரையின் வலையில் தேவ்கான் தம்பதி வீழ்ந்தார்களா இல்லை வெறும் நட்பா என்பது தெரியவில்லை. தங்களது ' யூ மீ அவுர் ஹம்' படத்தை பி.ஜே.பி. தலைவர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு வருகின்றனர் அஜய்தேவ்கானும், கஜோலும். அரசியல் முத்திரை இந்த அழகான தம்பதிகளுக்கு நிச்சயம் அழகாக இருக்கப் போவதில்லை.