இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது மோசடிப் புகார் கொடுத்திருக்கிறது டீ-சீரிஸ் நிறுவனம்!
வர்மாவின் தயாரிப்பு நிறுவனம் கம்பெனி. டீ-சிரிஸின் சூப்பர் கேசட்ஸ் நிறுவனம் வர்மாவின் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது. அதன்படி, வர்மா படங்களின் வீடியோ உரிமையை சூப்பர் கேசட்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டும்.
ஆனால், 'ஆக்' படத்தின் வீடியோ உரிமையை வேறு நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார் வர்மா. இதனால் அவர் மீது மோசடிப் புகார் கொடுத்திருக்கிறது டீ-சீரிஸ்.
ஒரு கோடியே நாற்பது லட்சங்கள் கொடுத்த பிறகும் 'ஆக்' படத்தின் உரிமையை வேறு நிறுவனத்துக்கு தாரை வார்த்துவிட்டார் வர்மா என புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஏழு பிரிவுகளில் வர்மா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது போலீஸ்.
ஏழு இப்போது வர்மாவுக்கு ஏழரையாகியிருக்கிறது.