Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அமிதாப் - ரேகா ஜோடி?

மீண்டும் அமிதாப் - ரேகா ஜோடி?
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (20:09 IST)
இந்தி சினிமாவின் பிரச்சனையான, பிரகாசமான எவராலும் மறக்க முடியாத ஜோடி, அமிதாப் பச்சன் - ரேகா. அமிதாப், ஜெயா பச்சன் காதலுக்குப் பிறகு இந்த ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.

கடைசியாக அமிதாப் பச்சனும், ரேகாவும் சில்சிலா படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். யாஷ் சோப்ராவின் இந்தப் படம் வெளிவந்தது 1981-ல்!

ஏறக்குறைய இருபத்தியாறு வருடங்களுக்குப் பிறகு அமிதாப் - ரேகா இணைந்து நடிப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. சுஜாய் கோஷின் Alladin படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இதில் நடிக்க ரேகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.

Alladin-ல் ரேகா, அமிதாப் பச்சன் இணைந்து தோன்றும் சில காட்சிகளும் இடம் பெறுகிறதாம். இதுகுறித்து சுஜாய் கோஷிடம் கேட்டால், எதையும் முடிவு செய்யும்முன் இப்படி கிளப்பி விடுகிறார்களே என்று சொன்னதோடு சரி. அமிதாப்புடன் ரேகா நடிக்கும் செய்தியை மறுக்கவும் இல்லை ஒரேடியாக ஏற்கவும் இல்லை.

மில்லினியம் ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil