அமீர் கானை தொடர்ந்து அஜய் தேவ்கனும் இயக்குனராகிவிட்டார். கேட்டால், நான் முன்பே பாதி இயக்குனர்தான் என்று பதறவைக்கிறார்.
சேகர் கபூரின் துஷ்மன் படத்தில் நான் சேகர் கபூருடன் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் பாதி இயக்குனர் என்கிறார் இந்த கஜோலின் கணவர். இவர் இயக்கிய U Me Aur Kum விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்தப் படத்தில் உங்களுக்கு சிரமமாக இருந்தது எது என்ற கேள்விக்கு, அஜய் தேவ்கன் அளித்த பதில், "என் மனைவி".
கஜோலும் இதில் நடித்திருக்கிறார். மனைவி என்றாலும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் ஒரு நடிகை. அவரிடம் வேலை வாங்க சிரமமாக இருந்தது என்றார் அஜய் தேவ்கன்.
மனைவியை நடிக்க வைப்பதில் அப்படி என்ன சிரமம்?
நடித்ததுடன் படத்தை தயாரித்ததும் கஜோல்தான்!
காரணமாகத்தான் கஷ்டப்பட்டிருக்கிறார் அஜய் தேவ்கன்!