ஜாமீனில் வந்திருக்கும் சஞ்சய் தத், தனது காதலி மான்யதாவை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். மான்யதா ஒரு மாடல். இவர்களின் காதலுக்கு சஞசய் தத்தின் மகள் (சஞ்சய் தத்தின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்) எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இதனால் இருவரின் திருமணமும் தள்ளிப்போனது.
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த சஞ்சய் தத்தின் மகள் தந்தையின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கோவாவிற்கு படப்பிடிப்புக்கு வந்த சஞ்சய் தத் பிப். 7ஆம் தேதி அங்கு வைத்து மான்யதாவை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கோவாவில் நடந்தது பதிவுத் திருமணம் என்பதால், நேற்று மான்யதாவின் வீட்டில் இந்து முறைப்படி இவரின் திருமணம் நடந்தது. திருமணப் பரிசாக மான்யதாவுக்கு வைர மோதிரம் பரிசளித்தார் சஞ்சய் தத். மூன்றாவது திருமணம் செய்து கொண்டிருக்கும் சஞ்சய் தத்திற்கு வயது 48.