இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்திலும் அமோகமாக ஓடுகிறது 'Taare zameen par'. சமீபத்தில் வெளியான இந்தியப் படங்களில், அயல்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.
புதிய இந்திப் படங்களான 'Halla Bol' மற்றும் 'Welcome' அமீர்கான் படத்துக்கு அடுத்த இடத்திலேயே உள்ளன. சென்ற வார இறுதி வரை இங்கிலாந்தில் மட்டும் ஏறக்குறைய நான்கரை கோடி ரூபாய் வசூலித்துள்ளது இப்படம். ஒரு திரையிடல் சராசரியிலும் அமீர் கான் படமே முன்னிலையில் இருந்தது. ’பீமா' படம் அதனை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளது.
மொத்தம் பதினான்கு திரையிடல்களில் ’பீமா' இங்கிலாந்தில் 39.49 லட்சங்கள் வசூலித்தது. இது சராசரியை விட அதிகம். இது 'Taare zameen Par' சராசரியை விட அதிகம்.
என்றாலும் மொத்த கலெக்க்ஷனில் இன்னமும் முதலிடத்திலேயே உள்ளது அமீர்கான் இயக்கியிருக்கும் படம். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா நாடுகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழிந்த பிறகும் என்பதுதான் விசேஷம்.