பொம்மை படம் வெளியாவதையொட்டி படத்தின் தயாரிப்பாளர்களிடம் ஒரு கண்டிஷன் - கட்டளை என்றும் சொல்லலாம் - போட்டிருக்கிறார் உச்சம். அதிகம் ஆசைப்பட்டு படத்தை அதிக விலைக்கு தராதீங்க. அப்படி விற்று நஷ்டம் ஏற்பட்டால் எந்த பஞ்சாயத்தும் எங்கிட்ட வரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
கிருஷ்ணருக்கு அவல் தந்தவர் பெயரில் தயாரான படத்தில் நான் சின்ன ரோல்தான் செய்கிறேன் என்று உச்சம் சொன்ன பிறகும் தயாரிப்பாளர்கள் அவரை முன்னுறுத்தி வியாபாரம் செய்ததில் அதிகம் கலெக்ஷன் ஆகியும், படம் நஷ்டம் என்று கெட்ட பெயர். அதனை முன் வைத்தே இப்படியொரு டீல் பேசியிருக்கிறார் பொம்மைப்பட தயாரிப்பாளர்களிடம்.