ஹிஸ்டரி படத்தில் நடித்த கா நடிகை சொந்த வேலைகளுக்கெல்லாம் உதவியாளர் வைத்துக் கொள்வதில்லை. தன் கையே தனக்கு உதவிதான் கா-வின் ஸ்டைல். சென்ற வாரம் வங்கியில் பணம் போட நீலாங்கரை வங்கிக்கு காவே நேரடியாக வந்தார். வங்கியில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். என்ன, நீங்களே வந்திருக்கீங்க என்று கேட்க, வேலை எதுவும் இல்லாமல் எத்தனை நேரம்தான் வீட்டிலேயே இருப்பது என்று சலித்துக் கொண்டார். இப்படியே வாய்ப்பில்லாமல் போனால் கறிக்கடை, காய்கறி மார்க்கெட்டிலெல்லாம் நடிகையை பார்க்கலாம்!
குட்டி லயன் படத்தின் கதாநாயகிக்கு நீச்சல் உடையை கொடுத்து கடலில் நீந்தச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். காஸ்ட்யூமின் அளவைப் பார்த்த முஞ்சால் நடிகை அஞ்சி நடுநடுங்கியிருக்கிறார். என்னோட படம்னா கதாநாயகி கடலில் குளிக்கிற காட்சி கன்ஃபார்மா இருக்கும் என்று தனது முந்தையப் படங்களின் கடல் குளியல்களை விளக்கி, முஞ்சாலை கடலில் நனைய விட்டிருக்கிறார் அந்த அடிதடி இயக்குனர்.
பாடல் எழுதுவதில் வித்தகரான கவிஞர், தான் நடிக்கும் படத்தின் பாடல் காட்சியை கம்யூனிஸ்ட் நாட்டில் ரொம்ப கிராண்டாக எடுத்துவிட்டு வந்தார். பாடல் எடுத்தச் செலவு என்று, படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் கூற, பதறிவிட்டார் தயாரிப்பாளர். இரண்டு பாடலுக்கே இவ்வளவு செலவா என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார் அந்த பரிதாப தயாரிப்பாளர்.