மீண்டும் வருகிறார் ஆக்சன் தாத்தா அர்னால்ட்
, திங்கள், 17 மார்ச் 2014 (15:57 IST)
ஜுலை முப்பதாம் தேதி வந்தால் ஹாலிவுட்டின் ஆக்சன் கிங்குக்கு 67 வயது நிறைவுறுகிறது. இந்த வயதிலும் தனது முன்னாள் மிஸ்டர் அமெரிக்கா முறுக்கிய உடற்கட்டுடன் எதிரிகளை அழிக்க தாத்தா தயார். வயதில்தான் தாத்தா. ஆரோக்கியத்தில் தாதா.
இந்த வாரம் அர்னால்ட் நடித்த Sabotage வெளியாகிறது. ஆக்ஷன் கதைதான். டேவிட் அய்யர் இயக்கம். அய்யர் என்பது சாதியில்லை, பெயர். அமெரிக்கர்.கலிபோர்னியா மாகாணத்தின் மேயர் பொறுப்பேற்றதால் 2005 லிருந்து 2009 வரை அர்னால்ட் எந்தப் படமும் நடிக்கவில்லை. 2010 ல் சில்வஸ்டர் ஸ்டாலோனின் த எக்ஸ்பென்டபிள்ஸ் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.