டாம் குரூஸுக்கு இப்போது வயது, நாற்பத்தியாறு. மனைவி கேற்றி ஹோல்மென். இவர்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருக்கின்றன.
ஆசை யாரை விட்டது? அதுவும் குழந்தை ஆசை? டாம் குருஸுக்கு இருக்கிற குழந்தைகள் போதவில்லை. மொத்தம் பத்து குழந்தைகள் இவருக்கு வேண்டுமாம்.
முதல் மனைவி நிக்கோல் கிட்மேன் இவரைவிட்டு பிரிந்து போனது ஏன் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. தனது சுயசரிதையை எழுதிவரும் நிக்கோல் கிட்மேன் அதில் டாம் குரூஸை பிரிந்ததற்கான காரணத்தை எழுத உள்ளாராம். பல திடுக்கிடும் உண்மைகளை அதில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் தனது பத்து குழந்தை ஆசையை வெளியிட்டிருக்கிறார் குரூஸ். நிக்கோல் கிட்மேனின் புத்தகத்தில் இந்த ஸ்டேட்மெண்டின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கலாம்.