Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அப்பாவாகிறார் டாம் குருஸ்

மீண்டும் அப்பாவாகிறார் டாம் குருஸ்
Katie holmes பங்ஷன் ஒன்றுக்கு தொள தொள ட்ரெஸ்சில் வந்திருக்கிறார். உடனே அமெ‌ரிக்க பத்தி‌ரிகைகள் போட்டி போட்டு எழுதித் தள்ளின.. கேட்டி கர்ப்பமாக இருக்கிறார்.

உண்மையா இது?

கேட்டி இதுவரை மறுப்பு தெ‌ரிவிக்கவில்லை. பெ‌ரிதாக தெ‌ரியும் வயிற்றை மறைக்கவே அவர் தொள தொள ட்ரெஸ் போடுவதாக துப்பறிந்து கண்டுபிடித்துள்ளன பத்தி‌ரிகைகள். கேட்டியின் கணவரான டாம் குருஸும் இது குறித்து மறுப்பு ஏதும் தெ‌ரிவிக்கவில்லை.

கேட்டி, டாம் குருஸ் தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறாள். இது இரண்டாவது குழந்தை. குழந்தையின் பிறப்பை பெற்றோர்களுக்கு முன் பத்தி‌ரிகைகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil