Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோபத்தில் பெனலப் குருஸ்

Advertiesment
கோபத்தில் பெனலப் குருஸ்
தனது புதிய ஆண் நண்பர் ஜாவியர் பர்டம் மீது கோபத்தில் இருக்கிறார், பெனலப் குரூஸ். கடுமையான காரணம்தான். பெனலப்பை பொறுத்தவரை நம்பிக்கை துரோகம்.

பெனலப்பும், ஜாவியரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு படங்களை குறைத்து இருவரும் தனிமையான இடத்தில் பொழுதை கழிப்பதென்று முடிவு செய்திருந்தனர். இந்த திட்டத்திற்காக தன்னை தேடி வந்த பல நல்ல வாய்ப்புகளை பெனலப் தட்டிக் கழித்தார்.

அதேநேரம் ஜாவியரோ அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்துவின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். துரோகம்தானே இது. ஆனால் இந்த அலெஜான்ட்ரோ யாரென்று தெரிந்தால் ஜாவியரின் மீது கோபம் வர வாய்ப்பில்லை. உலகை கலக்கிய 21 கிராம், அம்ரோஸ் பெரோஸ், பாபெல் படங்கள் இவரது கைவண்ணம்தான்.

கோய்ன் பிரதர்ஸின் நோ கன்ட்ரி ஃபார் ஓல்டுமேன் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுபெற்ற ஜாவியர், அலெஜான்ட்ரோவின் புதிய படத்தில் நடிப்பதன் முலம் மீண்டுமொரு ஆஸ்கருக்கு குறி வைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil