டீன் ஏஜ் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கிறது ஜார்ஜ் குளூனியின் ஆட்டம்.
லாஸ் வேகாஸ் ஹோட்டலில் காக்டெயில் கலந்து கொடுக்கும் வெயிட்டராக இருந்த சாராவை கண்டதும் காதல்.. ஸாரி, மோகம் கொண்டு தனது காதலியாக்கிக் கொண்டார், குளூனி.
வேறு எந்த காதலிக்கும் கொடுக்காத கவுரவமாக ஆஸ்கர் பரிசு வழங்கும் விழாவுக்கும் சாராவை அழைத்து வந்து ஆச்சரியப்படுத்தினார்.
எல்லாம் கொஞ்ச நாள்தான். அடுத்த துணையை தேடி பறந்துவிட்டார், குளூனி. சாராவை வளைத்துப் பிடித்து குளூனியுடனான அவரது காதல் தினங்களை உற்சாகத்துடன் பிரசுரித்து வருகின்றன பத்திரிகைகள்.
குளூனியுடன் செல்லும்போது அனைவரின் கண்களும் அவர் மீதுதான் இருக்கும் என்று தொடங்கி தங்களது அந்தரங்கம் வரை அனைத்தையும் பத்திரிகையில் காசாக்கி வருகிறார் சாரா. குளூனி அவரை பிரிந்த வருத்தம் துளியும் அவரிடம் இல்லை.
ஜாக்பாட் என்று சாரா நினைத்திருக்கலாம்.