புதிய வீட்டிற்கு குடிபோன பின் குதூகலமாகிவிட்டார் பாரிஸ் ஹில்டன். புதிய வீட்டில் பத்திரிகைகளின் தொந்தரவு இல்லை. முக்கியமாக பிரைவஸிக்கு எந்த பங்கமும் இல்லை.
ஆனால், பாரிஸ் ஹில்டன் போன்றவர்களை சும்மா விடுமா ஊடகங்கள். கிறிஸ்டினா ரொனால்டோவுடன் ஹில்டனுக்கு காதல் என்று ஊதிப் பெருக்கின.
ஆனால் இதில் உண்மையில்லை என்று மறுத்திருக்கிறார் பாரிஸ் ஹில்டன். அத்துடன் தன்னுடைய ஒரே காதல் தனது பாய்பிரண்ட் Benji madden உடன்தான் என்றும் கூறியுள்ளார்.
ஒரேயொருவருடன்தான் காதல்... ஆனால், எத்தனை நாளைக்கு என்று கேட்கிறார்கள் பாரிஸ் ஹில்டனின் குணம் தெரிந்தவர்கள்.
ஆனால், பாவம். பாரிஸ் ஹில்டனுக்கே இதற்கான பதில் தெரியாதே!