டாப் கன் படத்தில் பைலட்டாக டாம் குரூஸ் நிகழ்த்திய சாகஸம் மறக்க முடியாது. டாப் கன் 1986-ஆம் ஆண்டு வெளியானது. அப்போது விமானம் ஓட்ட டாம் குரூஸுக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.
நான் ரொம்ப பிஸி என அந்த வாய்ப்பை தட்டிக் கழித்தாராம் குரூஸ். விமானம் ஓட்டுவது கடினமாக இருந்ததே இந்த தப்பித்தலுக்கு காரணம்.
இது நடந்து எட்டு வருடம் கழித்து 1994-ல் விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸை வாங்கினார் குரூஸ். அப்போது அவரது வயது முப்பது. இருப்த்தியிரண்டு வயதிலேயே லைசன்ஸ் வாங்கியிருந்திருக்கலாம் என இப்போது வருத்தப்படுகிறார்.
அவரது வருத்தத்தை அவரது பதிமூன்று வயது மகன் தீர்த்து வைத்திருக்கிறான். இந்த இளம் வயதிலேயே இலகுரக விமானம் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறானாம். பதினாறு வயது ஆகும்போது விமானம் ஓட்டுவதற்கான உரிமம் அவனுக்கு கிடைத்துவிடும்.
22 வயதில் தன்னால் சாதிக்க முடியாததை பதினாறு வயதிலேயே முடிக்கப் போவது, எந்த தந்தைக்கும் பெருமைக்குரிய விஷயம்தானே!