சூப்பர் ஸ்டார்களின் படங்களே பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் வரும் என்ற கணக்கெல்லாம் ஹாலிவுட்டில் இல்லை. அமெரிக்காவின் எவர்கிரீன் பாக்ஸ் ஆபிஸ் பட்டியலைப் பார்த்தால், பத்து அனிமேஷன் படங்களவாது இடம் பெற்றிருக்கும்.
சென்றவாரம் அமெரிக்காவில் வெளியான அனிமேஷன் படம், குங்ஃபூ, பாண்டா, ஹாரிசன் போர்டின் இன்டியானா ஜோன்ஸ் மற்றும், ஹாலிவுட் ஆவலுடன் எதிர்பார்த்த, செக்ஸ் அண்டு தி சிட்டி படங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
முதல் வாரத்தில் பாண்டா கரடியின் குங்ஃபூ கலக்கல் படம் நான்காயிரத்து நூற்றுப்பதினான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த வருமானம் அறுபது மில்லியன் டாலர்கள். பாண்டா போடும் போட்டைப் பார்த்தால், இன்டியானா ஜோன்ஸின் மொத்தக் கலெக் ஷனை எளிதாக கடந்து விடும் என்கிறார்கள் ஹாலிவுட் வல்லுநர்கள்.