சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஹாலிவுட்டில் அதிகம். சுற்றுச்சூழல் மாசுபட அவர்கள் அதிகம் காரணமாக இருப்பதாலும் இருக்கலாம். தங்கள் விழிப்புணர்வை காட்ட சிலர் நிர்வாணமாக போராடுவார்கள். பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் நிதி அளிப்பார்கள். ஜூலியா ராபர்ட்ஸ் படம் நடிக்கிறார்.
சோடன் பர்க்கின் கெவின் ப்ரோக் கோவிச் படத்தில் தொழிற்சாலை ஒன்றின் நச்சுக் கழிவால் சுற்றுப்புறம் மாசுபடுவதை எதிர்த்துப் போராடும், பெண்மணியாக நடித்தார்.
இப்போது இரண்டு வருடங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் Joan Root குறித்த படத்தில் அவரது வேடத்தை ஏற்று நடிக்க உள்ளார் ஜூலியா ராபர்ட்ஸ்.
இந்த வேடத்தில் நடிக்க ஜூலியா ராபர்ட்ஸ் ரொம்ப த்ரில்லாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.