முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலரான பிராஸ்னன் நன்கொடை அளித்தது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் பாண்ட் வேடம் அலுத்துவிட்டது என்று கூறி மனைவி கீலியுடன் ஹவாயில் வசித்து வருகிறார் பிராஸ்னன். இவரது சுற்றுச்சூழல் ஆர்வத்தைக் கண்டு கிரீன் கிராஸ் ஆர்கனைசேஷன் சுற்றுச்சூழல் தலைமை விருதை பிராஸ்னனுக்கு 1997 ஆம் ஆண்டு அளித்தது.
உலகம் வெப்பமடைந்து வருவதற்கு எதிரான போராட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் பிராஸ்னன்.
ரகசிய உளவாளியாக கற்பனை வில்லன்களுடன் மோதியவர், நிஜ வில்லன்களைக் கண்டதும் அவர்களுக்கு எதிராகப் போராடுவதும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதான்!