பாடகி, நடிகை, இயக்குனர் என்று ஜெனிபர் லோபசுக்கு ஏற்கனவே மூன்று முகங்கள். ஆனால், அவர் அதிகம் விரும்புவது தாய் எனும் ஸ்தானத்தை.
சினிமாவில் நடித்துக் கொண்டே தொலைபேசிக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கு கொள்கிறார் ஜெனிபர் லோபஸ். முழுக்க லோபஸை முன்னிலைப்படுத்தும் ரியாலிட்டி ஷோ இது.
நடிப்பு, பாடல் என்ற பிஸிஷெட்யூல்டுக்கு நடுவில் எப்படி தனது குழந்தையை சமாளிக்கிறார், தனது தாய்மை அனுபவம் என ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத விஷயங்களை இந்த ரியாலிட்டி ஷோவில் வெளிப்படுத்த இருக்கிறாராம் லோபஸ்.
ரசிகர்கள் இப்போதே காத்திருக்கிறார்கள்!