Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் ஜாக் ஸ்பேரோவுக்கு கல்யாணம்!

Advertiesment
கேப்டன் ஜாக் ஸ்பேரோவுக்கு கல்யாணம்!
, புதன், 16 ஏப்ரல் 2008 (15:41 IST)
பைரேட்ஸ் ஃப் கரீபியன் ஹீரோ ஜானி டெப்பின் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் உலகப் பிரசித்தம். கப்பலில் ஏறி கடலை சுற்றிவரும் இந்த கதாநாயகனுக்கு வரும் ஜூன் 14ல் திருமணம்.

ஹாலிவுட் திருமணங்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. ஜானி டெப் மட்டும் விதிவிலக்கா! இவரது திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? ஜானியின் இரண்டு குழந்தைகள்தான். ஒரு குழந்தைக்கு வயது 8, இன்னொரு குழந்தையின் வயது 6.

ஃபிரான்ஸ் நாட்டுப் பாடகி வானெஸ்ஸாவுடன் கடந்த 10 வருடங்களாக வாழ்ந்து வருகிறார் ஜானி டெப். அதில் கிடைத்த வரப்பிரசாதம்தான் அந்த இரு குழந்தைகள்.

பத்து வருடம் ஒன்றாக வாழ்ந்த ஃபிரெஞ்ச் பாடகிக்கு திடீரென்று திருமணம் செய்ய ஆசை. நாயகியின் ஆசையை நிறைவேற்றுவதுதானே நாயகனின் கடமை. வானெஸ்ஸாவுக்கு அதுதான் விருப்பம் என்றால் நான் தயார் என அறிவித்துள்ளார் ஜானி டெப்.

ஜூன் 14 பெற்றோர்களின் திருமணத்தை இரு பிள்ளைகளும் பார்க்கப் போகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil