நடிகர் ஜார்ஜ் குளூனி தனது காதலி சாராவை பொது நிகழ்ச்சிகளுக்கு அதிகம் அழைத்து வருவதில்லை. இந்த விமர்சனத்தை ஆஸ்கார் விருது வழங்கிய ஞாயிறு இரவில் உடைத்தார் குளூனி.
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள ரொம்பவே ஆசைப்பட்டிருக்கிறார் சாரா. தவிர, மைக்கேல் கிளைடன் படத்துக்காக குளூனியின் பெயரும் சிறந்த நடிகர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
காதலியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரையும் விழாவிற்கு அழைத்து வந்தார் குளூனி. ஆனால், சிறந்த நடிகர் விருதை இங்கிலாந்து நடிகர் டேனியல் டே லெவிஸ் தட்டிச் சென்றது வேறு விஷயம். இதை குளூனியும் ஓரளவு எதிர்பார்த்ததால், விழாவில் காதலியுடன் உற்சாகமாகவே இருந்தார்.
சாராவின் சுருட்டை முடி அலங்காரத்தை நான்தான் செய்தேன். காஸ்ட்யூம் விஷயத்தில் நான்தான் உதவினேன் என்றெல்லாம் உற்சாகமாக கமெண்ட் அடித்தபடி இருந்தார் 46 வயதான குளூனி. இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. சாரா ஒரு காக்டெய்ல் வெயிட்ரஸ். பாரில் காக்டெய்ல் கலந்து கொடுப்பது இவரது (முன்னாள்) வேலை. ஆஸ்கார் விழா போன்ற பிரமாண்டமான பொது நிகழ்ச்சிகள் சாராவுக்கு புதிது.
குளூனி போன்ற காதலர் இருந்தால் சாரா போன்ற பெண்களுக்கு எதுவும் புதிதில்லை!