150 கலைஞர்களின் உழைப்பில் மும்பையை சேர்ந்த ரிதம் அன்ட் ஹுயுஸ் அனிமேஷன் நிறுவனம் 'தி கோல்டன் காம்பஸ்' திரைப்படத்திற்கு சிறப்பாக எஃப்க்ட்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கரின் 'சிறந்த எஃப்க்ட்ஸ் விருது' கிடைத்துள்ளது.
'சிறந்த அன்மேஷன் பட விருது' வழங்கப்பட்ட 'ரட்டாட்டொய்ல்' படத்திற்கான அனிமேஷன் பணிகளை குஜராத்தை சேர்ந்த அபுர்வா ஷா என்பவர் மேற்கொண்டுள்ளார்.
ஆஸ்கரின் சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்பு விருது பெற்ற 'தி கோல்டன் ஏஜ்' படத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபுர் தனது கடின உழைப்பை அளித்துள்ளார்.
இவ்வாறு இந்திய கலைஞர்களின் உழைப்பால் அயல்நாட்டினரது படங்கள் ஆஸ்கர் விருது பெற்றிருப்பது இந்தியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சிதான்.