Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிட்டிஷ் அகாடமி விருதுகள்!

Advertiesment
பிரிட்டிஷ் அகாடமி விருதுகள்!
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (18:45 IST)
2008 ஆம் ஆண்டிற்கான The British Academy Film and Arts (BAFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்தப் படத்துக்கான விருதை Ian McEwan எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'Atonement' திரைப்படம் பெற்றுள்ளது. 'Atonement' மொத்தம் 14 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கிடைத்தது என்னவோ இரண்டுதான்.

'There will be Blood' படத்தில் நடித்த Daniel Day - Lewis சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். விருதுக்கு வாய்ப்பேயில்லை என்று நம்பப்பட்ட பிரெஞ்ச் நடிகை Marion Cotillard சிறந்த நடிகைக்கான விருதை வென்று விருது குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவர் நடித்த La Vie En Rose திரைப்படம் சிறந்த இசை, சிறந்த உடையலங்காரம், சிறந்த ஒப்பனை என மொத்தம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.

BAFA விருதுகளில் ஆதிக்கம் செலுத்திய படங்களே ஆஸ்கார் விருதுப் போட்டியிலும் முன்னணியில் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil