பிரபல பாப்பாடகி மடோனா புத்தாண்டு விடுமுறையை ராஜஸ்தான் மாநிலத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.
அண்மைக் காலமாகவே ராஜஸ்தான் மாநிலம் பெரும்பாலான சுற்றுலா பயணிகளைத் தன்பால் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாப் பாடகி மடோனா தனது கணவர் கய்ரிச்சி, 2 வயது மகன் டேவிட் பாண்டா மற்றும் சில நண்பர்களுடன் இந்த புத்தாண்டு விடுமுறையை ராஜஸ்தானில் கழித்து வருகிறார்.
ஜோத்பூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரோஹித் என்ற கிராமத்தில் குதிரை சவாரியில் பொழுதைக் கழித்து வரும் மடோனாவுக்கு இந்திய குதிரை வகைகளில் மார்வாரி இன குதிரைகளின் சவாரி மேற்கொள்வது என்றால் கொள்ளை பிரியமாம்.