Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ஏ.ஜெகநாதன் காலமானார்

இயக்குனர் ஏ.ஜெகநாதன் காலமானார்
, திங்கள், 8 அக்டோபர் 2012 (14:16 IST)
FILE
எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி, கமல்ஹாசன், ர‌ஜினி என தமிழின் முன்னணி நடிகர்களை இயக்கிய ஏ.ஜெகநாதன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.

எம்.‌ஜி.ஆ‌ரின் இதயக்கனி, சிவா‌ஜியின் வெள்ளைரோஜா, ர‌ஜினியின் மூன்று முகம், தங்கமகன், கமலின் காதல் ப‌ரிசு... இவையெல்லாம் ஜெகநாதன் இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கவை. ஐம்பதுக்கும் மேல் படங்கள் இயக்கியிருக்கிறார்.

திருப்பூ‌ரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக ஜெகநாதன் திருப்பூர் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் திருப்பூர் மெடிகல் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை காலமானார்.

ஜெகநாதனுக்கு தற்போது 78 வயதாகிறது. அவருக்கு மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil