மணிரத்னத்தின் அடுத்தப் படம் குறித்த அடுத்த வதந்தி... ஹீரோயினாக கமலின் இளைய மகள் அக் ஷரா நடிக்கிறார்.
இசை, விளையாட்டில் ஆர்வம் உள்ள அக் ஷரா இயக்கம் படிப்பதற்காக மும்பையில் தனது தாயுடன் தங்கியிருந்து உதவி இயக்குனராக இந்திப் படத்தில் பணியாற்றி வந்தார். திரைக்குப் பின்னால் இருப்பதுதான் இவருக்கு பிடித்தமானது என்றார்கள்.
இப்போது நிலைமை தலைகீழ். மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் அக் ஷரா நடிப்பதாக செய்திகள் வருகின்றன. ஹீரோவாக கார்த்திக்கின் மகன் கௌதம் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அக் ஷரா தரப்பு இதனை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.