சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ் அடுத்த வருடம் திருமணம் செய்கிறார். மணமகன் அவரது பால்யகால நண்பர்.
சிவப்பதிகாரத்துக்குப் பிறகு தமிழ் சினிமா மம்தாவை கண்டு கொள்ளவில்லை. ஆனால் மலையாளம் அவரை அரவணைத்துக் கொண்டது. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் மம்தா மோகன்தாஸ் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் இருந்தது.
தற்போது அருண் விஜய்யின் தடையற தாக்க படத்தில் மம்தா நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். வரும் நவம்பரில் அவருக்கும் அவரது பால்ய நண்பருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் தற்போது பஹ்ரைனில் பணிபுரிந்து வருகிறார்.
அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.