வசந்த பாலன் அரவானை எடுக்கிறார்... எடுக்கிறார்... எடுத்துக் கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் புதுப்புது நட்சத்திரங்கள் படத்தில் இணைந்து கொண்டேயிருக்கிறார்கள்.
பசுபதி, ஆதி நடிக்கும் இந்தப் படத்தில் லேட்டஸ்டாக ஸ்வேதா மேனன் ஒப்பந்தமானார். இப்போது அஞ்சலி. அஞ்சலிக்கு இந்தப் படத்தில் கேரக்டர் எதுவுமில்லை. பரத்துடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.
அங்காடித்தெரு மூலம் அஞ்சலியை அனைவரும் அறியும்படி செய்தவர் வசந்த பாலன். அந்த நன்றி காரணமாகவே ஒரு பாடலுக்கு ஆட அஞ்சலி ஒப்புக் கொண்டிருக்கிறார்.