ஜூலை 7ஆம் தேதி தனுஷ் நடித்திருக்கும் வேங்கை வெளியாகிறது. சிங்கத்துக்குப் பிறகு ஹரி இயக்கியிருக்கும் படம் இது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்தது. ஆட்சி மாற்றம் காரணமாகவும், தொடர் தோல்வி காரணமாகவும், அவன் இவன் மற்றும் வேங்கை படங்களை வெளியிடும் திட்டத்தை சன் பிக்சர்ஸ் கைவிட்டது. அவன் இவனை தயாரிப்பாளரே நேரடியாக வெளியிட்டார்.
இந்நிலையில் வேங்கையை மீண்டும் சன் பிக்சர்ஸே வெளியிடும் வேலையில் இறங்கியது. பாடல்கள் வெளியீட்டை வழக்கம்போல மற்ற ஊடகங்களுக்கு அழைப்புவிடுக்காமல் ரகசியமாக நடத்தியது. ஹரியின் சிங்கம் வசூலை வாரி இறைத்ததால் வேங்கையில் சன் பிக்சர்ஸ் ஆர்வம் காட்டியது.
ஆனால் திடீரென மீண்டும் வேங்கை வெளியீட்டிலிருந்து சன் பிக்சர்ஸ் பின் வாங்கியுள்ளது. அவன் இவன் போல தயாரிப்பாளரே படத்தை நேரடியாக வெளியிடுகிறார்.