Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுகே - முதலிடத்தில் காவலன்

Advertiesment
யுகே - முதலிடத்தில் காவலன்
, திங்கள், 31 ஜனவரி 2011 (13:56 IST)
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் ஆடுகளம், சிறுத்தை இரண்டையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் காவலன்.

முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 55வது இடத்தைப் பிடித்த ஆடுகளம் சென்ற வாரம் 81வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் மொத்த யுகே வசூல் 4.663 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 3.39 லட்சங்கள்.

முதல் வாரத்தில் 27வது இடத்தைப் பிடித்த சிறுத்தை சென்ற வாரம் 43வது இடத்தை கைப்பற்றியுள்ளது. இதுவரை இப்படம் 40,256 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் சுமார் 29.31 லட்சங்கள்.

சென்ற வாரம்தான் காவலன் யுகே-யில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தை பிடித்துள்ளது. இதன் வசூல் 43,345 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் சுமார் 31.55 லட்சங்கள்.

முதல் வாரத்திலேயே முப்பது லட்சத்துக்கு மேல் வசூல் செய்ததால் காவலன் யுகே-யில் 75 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யும் என நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil