நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம், வேட்டை மன்னன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இந்திப் படவுலகிலிருந்து தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒருவராவது இந்திப் படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பார் என்கிறார்கள்.
வேட்டை மன்னனின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது என்பதால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.