கலைப் படங்கள் எடுப்பவர்களின் ஒரே சந்தோஷம் சர்வதேச திரைப்பட விழாக்கள். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்கள் படங்களைப் பார்த்து பாராட்டுவதுதான் அவர்களின் ஒரே சந்தோஷம்.
அந்த சந்தோஷம் வசந்தபாலனுக்கு கிடைத்துள்ளது. கோவாவில் வருடா வருடம் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழா முக்கியமானது. இதில் அங்காடித்தெரு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் வசந்தபாலனை வெகுவாக பாராட்டினர்.
தமிழனுக்கு கிடைத்த பாராட்டு தமிழுக்கே கிடைத்த மாதிரிதான்.