தெற்குப் பக்கம் படப்பிடிப்புக்கு சென்றவர்களெல்லாம் நனைந்த கோழிகளாக திரும்பிவிட்டார்கள். காரணம் மழை.
பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வந்தது. மழை காரணமாக அதையும் நிறுத்திவிட்டார்கள். மழை மலையேறினால்தான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பே.
இந்நிலையில் நேற்றிலிருந்து தெற்கே மழை தூறலாக மாறி சில இடங்களில் சுத்தமாக காணாமல் போய்விட்டது. அதற்குப் பதில் சென்னையை குளமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் 7ஆம் அறிவு உள்பட பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நின்றால் மட்டுமே கோடம்பாக்கம் பிஸியாகும்.