போராளிகளுக்கும் இந்த இயக்குனர் நண்பர்களுக்கும் அப்படியென்ன பிணைப்பு என்று தெரியவில்லை. நாம் இயக்குனர் நண்பர்கள் என்று சொன்னது சசிகுமாரையும், சமுத்திரக்கனியையும்.
சமுத்திரக்கனி மோகன்லாலுடன் சிக்கார் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு போராளி வேடம். தான் பெற்ற இன்பம் தனது நண்பனும் பெற வேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை, தனது அடுத்தப் படமான போராளியில் சசிகுமாரை ஹீரோவாக்கியிருக்கிறார்.
போராளியில் போராளியாகவே வருகிறார் சசிகுமார். இதற்காக தாடியுடன் சேர்ந்து தலைமுடியையும் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். போராளி என்று தெரிய வேண்டுமே.
ஈசன் வெளியானதும் போராளி புறப்படுவான் என தெரிகிறது.