தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு. ஒரு நாள் சம்பளமாக ஏழிலிருந்து பத்து லட்சம் வாங்குகிறார்.
இவருக்கு அடுத்த இடத்தில் வருகிறார் சந்தானம். இவர் நடித்தப் படங்களில் ஹீரோவுக்கு இணையாகப் பேசப்படுவதால் சம்பளத்தை ஐந்து லட்சமாக உயர்த்தியிருக்கிறார். அப்படியானால் இவர் எப்படி வடிவேலுவை ஓவர்டேக் செய்தார் என்று கேட்கத் தோன்றும்.
வடிவேலு இந்த இடத்தை அடைய எடுத்துக் கொண்டது பல வருடங்கள். சந்தானம் சில வருடங்களிலேயே ஐந்து லட்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். மேலும் வடிவேலுவைவிட இப்போது இவர்தான் அதிகப்படங்களில் நடித்து வருவதாக கோடம்பாக்க பட்சி சொல்கிறது.
நாமெல்லாம் சாதாரணமான ஆளுண்ணே என்று வெளியே பம்முனாலும் கரன்சி விஷயத்தில் கறாராகதான் இருக்கிறாராம் சந்தானம்.