அவ்வளவு எளிதில் தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் பாராட்ட மலையாளிகள் துணிய மாட்டார்கள். அதுவும் சினிமாவைப் பொறுத்தவரை மலையாளிகள்தான் டாப் என்ற எண்ணம் அவர்களுக்கு.
ஆனால் சமீபகாலமாக அவர்களுக்குள் மாற்றம். பருத்திவீரன், நான் கடவுள், சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் மலையாளிகளின் தான் என்ற நினைப்பை வெகுவாக கலைத்திருக்கின்றன.
மலையாளத்தில் சிறப்பான படங்களை எடுத்துவரும் ரஞ்சித் மனம் திறந்து தமிழ் சினிமாவைப் பாராட்டியிருக்கிறார். மலையாள சினிமா தமிழ் சினிமாவைப் பார்த்து கற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் நடந்த விழாவில் அவர் மனப்பூர்வமாகச் சொன்னது தமிழ் சினிமாவை ஆளும் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
இயக்குனர்களே... உங்கள் அசத்தல் தொடரட்டும்.