வெண்ணிலா கபடிக்குழு, துரோகி படங்களில் நடித்த விஷ்ணுவுக்கு திருமணம். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தனது ஜுனியர் மாணவியான ரஜினியை கை பிடிக்கிறார்.
விஷ்ணு எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது ரஜினி அவரது ஜுனியர். அப்போதே விஷ்ணுவுக்கு அவர் மீது காதல். காதலை வீட்டில் சொன்னதும் உடனே சம்மதம் கிடைக்க திருமண ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி கல்யாணம்.
மணமகள் ரஜினி நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ராஜின் மகளாம்.
வருங்கால தம்பதிகளுக்கு நமது வாழ்த்துகள்.