மிஷ்கினின் நந்தலாலா வரும் 26ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து வெளிவரும் படம் யுத்தம் செய். சேரன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்திக்கு செல்கிறார் மிஷ்கின்.
இன்றைய இளைய தலைமுறையின் லட்சியமே பாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்பதுதான். இந்திப் படம் இயக்கினால் இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் வாழும் எல்லா உலக நாடுகளையும் ஒரே படத்தில் சென்றடைய முடியும்.
மிஷ்கினுக்கு அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்கவிருக்கிறது. யுத்தம் செய் படத்துக்குப் பிறகு ஜான் அபிரஹாமை வைத்து இந்திப் படம் இயக்குகிறார் மிஷ்கின். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
மிஷ்கினின் முதல் இந்திப் படம் சித்திரம் பேசுதடியா அல்லது அஞ்சாதேயா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.