Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழை விரும்பும் கன்னட நடிகை

தமிழை விரும்பும் கன்னட நடிகை
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2010 (14:50 IST)
ஐந்தடி உயரத்தில் அசத்தல் அழகுடன் இருக்கிறார் ஹசிகா. ‘மலர் மேல்நிலைப்பள்ளி’ படத்தின் ஹீரோயின்.

படிக்கும்போதே மாடலிங், விளம்பரம் என கலக்கிக் கொண்டிருந்த ஹசிகாவை நடிக்க வைக்க கன்னட, தெலுங்குப் படவுலகங்கள் ரொம்பவே முயன்றன. ஆனால் அம்மணி விரும்பியது தமிழை. தமிழில்தான் எனது சினிமா பிரவேசம் இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதாநாயகியானேன் என சீரியசாக பேசுகிறார் ஹசிகா.

முதல் படம் வெளிவரும் முன்பே தயாரிப்பாளர்கள் அட்வான்சுடன் இவரது ஹோட்டல் கதவை தட்டுகிறார்கள். கதை கேட்டுப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்பவர், கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிப்பேன் என்கிறார்.

அப்போ அம்மணி பிழைச்சுக்குவார்.

Share this Story:

Follow Webdunia tamil