Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்கள் தருவார்களா க்ரீன் சிக்னல்

Advertiesment
ரசிகர்கள் தருவார்களா க்ரீன் சிக்னல்
, சனி, 26 ஜூன் 2010 (13:41 IST)
அரசியலுக்கு வந்து வாழ்வைத்தொலைக்கும் இளைஞர்களின் கதை பச்சை மலைக் காத்து. 'அ' திரை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கீரா இயக்குகிறார்.

இது உண்மைக் கதையின் அடிப்படையில் தயாராகும் படம் என்று சொல்லும் இயக்குநர் இந்தப் படத்தில் நிறைய புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிறது.

இறந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி அவனது நண்பர்கள் ஏழுபேர் வெவ்வேறு கோணத்தில் விவரிப்பார்கள். (இந்த யுக்திக்காக அகிரா குரசோவாவுக்கு டைட்டில்ல நன்றி போடூவிங்களா சார்) கதை 1980 முதல் 2005 வரையுள்ள ஐந்து பருவங்களில் நடப்பதால், ஐந்தையும் வித்தியாசப்படுத்திக் காட்ட ஐந்து விதமான கேமராக்களில் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அன்பு ஸ்டாலின். அடுத்த மாதம் பச்சை மலை காத்தை திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் . ரசிகர்கள் க்ரீன் சிக்னல் தருவார்களா.

Share this Story:

Follow Webdunia tamil