ஸ்ரேயா சில்வர் ஸ்கீரின் பட நிறுவனம் சார்பில் ராஜேஷ் உத்தமன் தயாரிக்கும் படம் தா. இப்படத்தை சமுத்திரக்கனியின் உதவியாளர் சூர்யா பிரபாகர் இயக்குகிறார்.
ஹரி ஹீரோவாகவும் மும்பையைச் சேர்ந்த நிஷாஹீரோயினாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் கோவை மாவட்டம்.
ஆணின் சிறப்பு அவனது பலத்தில் இல்லை குணத்தில் இருக்கிறது என்பதை மைய இழையாகக் கொண்டு தயாராகிவரும் இப்படம் அடுத்தமாதம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். டைரக்டர் தா என்று கேட்பது எதை, யாரிடம் என்பதுதான் புரியவில்லை.