மறுபடியும் போஸ்டர் ஒட்டுவது வரை அத்தனை பொறுப்புகளையும் ஒத்தையாய் தோளில் சுமந்து படமெடுக்கத் தொடங்கிவிட்டார் டி.ஆர். படத்தின் பெயர் ஒருதலைக் காதல். 1980 இல் ஒருதலை ராகம் பேசப்பட்டது.
2010 இல் ஒருதலைக் காதல் பேசப்படும் என்று சவால் விடும் டி.ஆர் அதற்காக சூப்பராக ஏழு பாடல்களையும் எழுதி கம்போஸ் பண்ணிவிட்டாராம். விரைவில் தன் இளைய மகன் குறளரசனையும் களமிறக்குவதாக இருக்கிறார்.
ஒருதலைக்காதல் படம் முடிந்ததும் குறளரசன் படத்துக்கான கதையில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறும் டி.ஆர் அதற்காக இப்போதே அவரை ஜிம், டயட், டான்ஸ் பயிற்சி என தயார் செய்து வருகிறார்.