Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் மேலுமொரு கார்ப்பரேட் நிறுவனம்

தமிழில் மேலுமொரு கார்ப்பரேட் நிறுவனம்
, புதன், 4 நவம்பர் 2009 (14:34 IST)
2008 ஆம் ஆண்டுடன் கார்ப்பரேட் நிறுவனங்களின் விஸ்வரூபம் தமிழ் சினிமாவில் கலகலத்துப் போனது. படங்களில் முதலீடு செய்யவே தயங்குகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள்.

ஐங்கரன், மோசர் பேர் போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மிகுந்த தயக்கத்துடனும், எச்ச‌ரிக்கையுடனும் படங்களை‌த் தயா‌ரித்து வருகின்றனர். இவர்களுடன் இணையும் மற்றுமொரு நிறுவனம், H2B ஸ்டுடியோஸ்.

இந்த புதிய நிறுவனத்தின் தலைவர் சக்ரவர்த்தி தயா‌ரிக்கும் படம், கையெழுத்து. ஷான்குமார் நடிக்க மோகமுள் அபிஷேக் படத்தை இயக்குகிறார். இவர்கள் இணைந்து இதற்குமுன் உருவாக்கிய படம், கதை. அந்தப் படம் வெளிவரும் முன் அதே டீம் கையெழுத்து படத்தை தொடங்கியிருக்கிறது.

சார் பதிவாளர் அலுவலகத்தில் பணத்துக்காக பொய் கையெழுத்து போடும் இளைஞனை பற்றிய கதையாம். ரொமா‌ண்டிக் காமெடியாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அபுஷஒளடிப்பதிவு செய்ய, பால்ஜே இசையமைக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை செய்த தவறுகளை ஆராய்ந்து, அந்த தவறுகள் இல்லாமல் படமெடுக்க வந்திருப்பதாக கூறினார் சக்ரவர்த்தி. இந்த வருடத்தில் மேலும் சில படங்களை தயா‌ரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

கையெழுத்து பற்றி உறுதி செய்யப்படாத இன்னொரு தகவல், படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெ‌ரிவித்திருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil