Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் கதை

Advertiesment
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் கதை
, சனி, 14 மார்ச் 2009 (13:59 IST)
இந்தமுறையும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கதையுடன் வருகிறார் இயக்குனர் சிம்புதேவன். படத்தின் பெயர் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.

தமிழ் சினிமாவில் வழக்கழிந்துபோன கௌபாய் கதை இது. லாரன்ஸ் ஹீரோ. பத்மப்‌ரியா, லட்சுமிராய் ஹீரோயின்ஸ். சந்தியாவும் நடிக்கக் கூடும். படத்தின் கதையை கேட்கும்போதே சி‌ரிப்பு சிதறுகிறது.

ஜெய்சங்க‌ரின் கௌபாய் படங்களில் வரும் மெக்சிகோ நகரங்களைப் போல ஒரு இடம். அதன் பெயர் ஜெய்சங்கர் நகர். ஜெய்சங்க‌ரின் படங்களில் வில்லனாக வரும் அசோகனின் முழுஉருவச் சிலையை வைத்து அங்கு அட்டகாசம் செய்கிறான் வில்லன்.

ஜெய்சங்கர் இருந்தபோது இதுபோன்ற கஷ்டங்களிலிருந்து அவர்தான் எங்களை காப்பாற்றினார் என மக்கள் புலம்புகிறார்கள். இப்போது ஜெய்சங்கர் உயிரோடு இல்லை. வில்லனின் கொட்டத்தை அடக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, ஜெய்சங்க‌ரின் மகன் உயிரோடு இருப்பதாகவும், அவ‌ரிடம் உதவி கேட்கலாம் என்றும் கூறுகிறார் ஒருவர். அந்த மகன்தான் லாரன்ஸ்.

அப்பா அளவுக்கு தனக்கு சாகசம் தெ‌ரியாது என்று மறுக்கும் லாரன்ஸ் பிறகு உதவி செய்ய சம்மதிக்கிறார். அடுத்து நடப்பவை கௌபாயின் காமெடி ப்ளஸ் அ‌ட்வெ‌ன்ன்சர் தர்பார்.

முதல் படம் இம்சை அரசனைப் போலவே நிஜத்தையும், கற்பனையையும் ச‌ரிவிகிதத்தில் கலந்து முரட்டு சிங்கத்தை உருவாக்குகிறார் சிம்புதேவன். ஆகவே சி‌ரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil